Map Graph

அச்மீர் தில்லி நுழைவாயில்

இந்தியாவின் இராசத்தான் மாநிலம் அச்மீரில் உள்ள நுழைவாயில்

தில்லி நுழைவாயில் இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலுள்ள அச்மீர் நகரப் பகுதியில் உள்ளது. சூஃபி துறவி குவாச்சா மொய்னுதீன் சிசுடியின் தர்காவுக்குச் செல்லும் வழியில் ஒரு பெரிய வளைவு நுழைவாயிலாக இந்நுழைவாயில் அமைந்துள்ளது. வலப்பக்கத்தில் தூண்களுடன் கூடிய மண்டபம் காவலர்களால் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நுழைவாயில் முகலாய பேரரசர் அக்பரால் கி.பி 1571 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. மேலும் இந்த நினைவுச்சின்னம் இந்திய தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ளது.

Read article
படிமம்:DELHI_GATE.jpgபடிமம்:India_Rajasthan_location_map.svg